மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்வி காரணமாக கேப்டன்ஸி மாற்றம்?

மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்வியை சந்தித்து இருக்கும் நிலையில், அந்த அணியில் கேப்டன்ஸி மாற்றம் இருக்கும் என ரோஹித் கூறி உள்ளார்.
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன், சரியாக டிசம்பர் 15ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட மும்பை இந்தயின்ஸ் அணி, ”ஹர்திக் பாண்டியாவை அணிக்கு கேப்டனாக நியமிக்கிறோம்” என அறிவித்தது.
ரோஹித் சர்மாவிடம் இருந்த கேப்டன் பதவியை, ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுத்ததை, பலர் விமர்சித்து வருகிறார்கள். ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் ஹர்திக்கிற்கு இன்னும் வாழ்த்துகளை கூறவில்லை.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில், கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, மும்பைக்கு ஹட்ரிக் தோல்வியை பெற்றுக்கொடுத்துள்ளார். இது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
மும்பை அணி பெரும்பாலான சீசன்களின்போது, முதல் பாதி ஆட்டங்களில் சிறப்பாக செயல்படுவது கிடையாது. 2015-ல் கூட முதல் 4 போட்டிகளில் தோற்று, இறுதியில் கோப்பை வென்றது. 2022-ல் முதல் 6 போட்டிகளில் தோற்று, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இதனால், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருப்பது, பெரிய பிரச்சினை கிடையாது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இருப்பினும், ஹர்திக்கின் கேப்டன் பதவி, ஆபத்தில்தான் இருப்பதாக கருதப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதுமே, அதிரடிக்கு பேர்போனது. தற்போது, ஹர்திக்கை அதிரடியாக கேப்டனாக நியமித்துள்ளனர். ஆனால், ரசிகர்கள் மற்றும் ரோஹித் போன்ற வீரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், மீண்டும் அதிரடி முடிவை எடுக்க தயங்க மாட்டார்கள் என மனோஜ் திவாரி பேசியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸுக்கு அடுத்த போட்டி, ஏப்ரல் 7ஆம் தேதிதான். இன்னமும் 5 நாட்கள் இருக்கிறது. இந்த 5 நாட்களில், மீண்டும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கிறோம் என அந்த அணி நிர்வாகம் அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



