பிரதமர் மோடி சவுதி இளவரசருடன் மூலோபாய கூட்டாண்மை குறித்து விவாதித்தார்!
India:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் இன்று உரையாடினார். அப்போது இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையேயான மூலோபாய கூட்டுறவின் எதிர்காலம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில் மேற்கு ஆசியாவில் நிலவும் நிலை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். பயங்கரவாதம் மற்றும் பொதுமக்களின் உயிர் இழப்புகள் குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.
எனது சகோதரர் இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் அவர்களுடன் இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவின் எதிர்காலம் குறித்து ஒரு நல்ல உரையாடலை நடத்தினேன். நாங்கள் மேற்கு ஆசிய நிலைமை குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம் மற்றும் பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்கள் உயிர் இழப்புகள் தொடர்பான கவலைகளை பகிர்ந்து கொண்டோம். பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோடி X -ல் பதிவிட்டுள்ளார்.
இந்தியா-சவுதி அரேபியா வியூகக் கூட்டாண்மை கவுன்சிலின் முதல் தலைவர்கள் கூட்டத்தையும் இரு தலைவர்களும் நடத்தினர். கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி, இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையேயான பொருளாதார வழித்தடம் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்த பிராந்தியங்களுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை வழங்கும் என்று கூறினார்.