மாமன்னன் படத்தின் ’ராசா கண்ணு’ பாடல் வெளியானது!

இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது இயக்கியுள்ள திரைப்படம் மாமன்னன் (Maamannan ). இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது, அவரே நாயகனாகவும் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.
மாமன்னன் படத்துக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏற்கனவே அழுத்தமான கதைகள் கொண்ட பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில். அதே வரிசையில் புதிய மாமன்னன் படமும் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் வைகை புயல் வடிவேலு ஒரு பாடல் பாடியுள்ளார். அவர் பாடியுள்ள ராசா கண்ணு பாடல் இன்று வெளியானது. வலி, வேதனை மிகுந்த வார்த்தைகளை கவிஞர் யுகபாரதி எழுத, வடிவேலு மிகவும் உருக்கமாக பாடியுள்ளார்.
இந்த பாடல் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பாடல் பதிவு காட்சி கீழே காண்க: