புர்ஜ் கலிஃபாவில் அனிமல் படத்தின் டீசர் வெளியாகியது!

நடிகர் ரன்பீர் கபூர் விரைவில் வெளியாகவுள்ள தனது ஆக்ஷன் த்ரில்லர் படமான அனிமல் படத்தை ப்ரமோட் செய்வதில் பிஸியாக இருந்து வருகிறார். அந்தவகையில் நேற்று இரவு, உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் அவரது அனிமல் படத்தின் டீசர் 60 வினாடிகள் காட்சிப்படுத்தப்பட்டது.
நடிகர் ரன்பீர் கபூர், பாபி தியோல் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார் ஆகியோர் தங்களது வரவிருக்கும் படத்தின் டீசரை காண புர்ஜ் கலிஃபாவிற்கு வந்திருந்தனர்.
புர்ஜ் கலிஃபாவில் வெளியான டீசரின் பல படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் ரன்பீர், ராஷ்மிகா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில், ரன்பீரின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.
இந்த படம் டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.