காசாவுக்கான உதவிகளை தொடர்ந்து அனுப்பி வரும் சவுதி அரேபியா!

ரியாத்
சவுதி அரேபியாவில் இருந்து காசாவிற்கு உதவிகளை ஏற்றிச் சென்ற 14வது விமானம் ஞாயிற்றுக்கிழமை எகிப்தில் உள்ள எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், பாலஸ்தீனத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்ட 20 ஆம்புலன்ஸ்களில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் கொண்டு செல்லப்பட்டது.
சவுதி உதவி நிறுவனமான KSrelief தொடங்கிய Sahem தளம் மூலம் ஞாயிற்றுக்கிழமைக்குள் 876,000 க்கும் அதிகமானோர் $132 மில்லியனுக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளனர்.
இந்நிலையில் காசாவுக்கான உதவிகளை ஏற்றிச் செல்லும் சவுதியின் 15வது விமானம் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்டது. சமீபத்திய விமானத்தில் 31 டன் உணவு மற்றும் தங்குமிட பொருட்கள் உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றப்பட்டன.



