சவுதி செய்திகள்
சவுதி அரேபிய கரன்சி நோட்டுகளை கள்ளநோட்டாக மாற்றினால் கடும் தண்டனை

சவுதி அரேபிய கரன்சி நோட்டுகளை கள்ளநோட்டாக மாற்றும் மற்றும் சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட எச்சரிக்கையை சவுதி அரசு தரப்பு வெளியிட்டுள்ளது.
முன்பு twitter என்று அழைக்கப்பட்ட X தளத்தில் சவுதி அரசு அதிகாரப்பூர்வ கணக்கு மூலம் கூறியுள்ளதாவது:- சவுதி அரேபிய கரன்சி நோட்டுகளின் குணாதிசயங்களை சிதைப்பது, கிழிப்பது, இரசாயன மாற்றம் அல்லது வேறு ஏதேனும் சேதங்களை வேண்டுமென்றே ஏற்படுத்தும் நபர்கள் கடுமையான சட்ட விளைவுகளுக்கு உட்பட்டவர்கள் என்று அரசுத் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் 10,000 சவுதி ரியால்கள் வரை அபராதம் செலுத்த வேண்டும். அல்லது அபராதத்துடன் சேர்த்து 3-5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
#tamilgulf