சவுதி செய்திகள்
தோஹாவில் சவுதி அமைச்சரை கத்தாரின் அமீர் வரவேற்றார்!

தோஹா
சவுதி அரேபிய ராஜாங்க அமைச்சர் இளவரசர் துர்கி பின் முகமது பின் ஃபஹ்த்தை கத்தார் எமிர் தமீம் பின் ஹமத் அல்தானி திங்கள்கிழமை தோஹாவில் வரவேற்றார்.
இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுதி அமைச்சர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், கத்தார் அமீர் சவுதி அரேபியாவின் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
#tamilgulf