தோஹா வளாகத்தை மூடும் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் முடிவால் கத்தார் ஏமாற்றம்

2028 ஆம் ஆண்டிற்குள் தோஹாவின் கல்வி நகரத்தில் உள்ள தனது வளாகத்தை மூடும் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் முடிவு குறித்து கத்தார் அறக்கட்டளை(QF) ஏமாற்றம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கின் உறுதியற்ற தன்மை அதிகரித்ததன் காரணமாக, அறக்கட்டளையுடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆதரவாக, பல்கலைக் கழக ஆட்சியாளர்கள் குழு 7-1 என வாக்களித்தது.
ஒரு அறிக்கையில், பிப்ரவரி 9, வெள்ளிக்கிழமை, அறக்கட்டளை முடிவு “QF-ன் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் தவறான தகவல் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியது.
“டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகம் போன்ற உலகளவில் மதிக்கப்படும் கல்வி நிறுவனம் இத்தகைய பிரச்சாரத்திற்கு பலியாகி, அதன் முடிவெடுக்கும் செயல்முறைகளில் அரசியலை ஊடுருவ அனுமதித்தது ஆழ்ந்த ஏமாற்றம் அளிக்கிறது.
“இந்த தவறான முடிவை எடுப்பதற்கு முன்பு கத்தார் அறக்கட்டளையிடம் இருந்து உண்மையைக் கண்டறிய வாரியம் எந்த நேரத்திலும் முயற்சி செய்யவில்லை.” என்று QF வருத்தம் தெரிவித்துள்ளது



