ஒரு மில்லியன் குவைத் தினார் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

குவைத்தில் உள்துறை அமைச்சகம் (MoI) சமீபத்தில் ஒரு மில்லியன் குவைத் தினார் (ரூ. 27,01,26,260) மதிப்புள்ள 13,422 மதுபாட்டில்களை கைப்பற்றியது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை விட மிக அதிகமாக கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய நாட்டிலிருந்து கொண்டுவந்த மரச்சாமான்கள் கொள்கலனில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்டுள்ளது.
கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுங்கத்தின் பொது நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மதுபான வியாபாரிகள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு எதிராக குற்றவியல் பாதுகாப்புப் பணியாளர்கள் நடத்திய “வேதனைகரமான மற்றும் வெற்றிகரமான” சோதனை என்று அமைச்சகம் விவரித்தது.