குவைத் செய்திகள்
குவைத் சுத்திகரிப்பு ஆலையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!
குவைத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-ஸூர் சுத்திகரிப்பு நிலையத்தின் உள்ளே உள்ள சேமிப்புப் பகுதிகளில் ஒன்றில் ஏற்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்று குவைத் ஒருங்கிணைந்த பெட்ரோலிய தொழில் நிறுவனத்தின் (KIPIC) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
#tamilgulf