அமீரக செய்திகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானிலை: இன்றைய நாள் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிக்கைபடி, ஜூன் 30, ஞாயிற்றுக்கிழமை சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இன்று பகல் வேளையில் நாட்டில் லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை உள் பகுதிகளில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலை 43ºC மற்றும் 42ºC வரை எட்டும்.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் அலை சிறிது சிறிதாக இருக்கும்.
#tamilgulf