IPL போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த் மும்பை அணி
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசிவரை போராடிய மும்பை அணி, முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
டெல்லிக்கு எதிராக முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 234/5 ரன்களை குவித்து அசத்தியது. பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், அதேபோல் மும்பை அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது.
மும்பை இந்தியன்ஸ் ஓபனர்கள் ரோஹித் சர்மா 49 (27), இஷான் கிஷன் 42 (23) ஆகியோர் சிறந்த துவக்கத்தை கொடுத்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா 39 (33) நிதானமாக விளையாடினார். இறுதிக் கட்டத்தில் டிம் டேவிட், ரொமாரியோ செய்பர்ட் ஆகியோர் அதிரடி காட்டினார்கள்.
19 ஓவர்களில் 202/5 ரன்களை மட்டும் அடித்திருந்த நிலையில், நோர்க்கியாவுக்கு எதிராக செய்பர்ட் 4 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 32 ரன்களை குவித்து அசத்தினார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 234/5 ரன்களை குவித்தது.
மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில், ஓபனர் பிரித்வி ஷா 66 (40), அபிஷேக் போரல் 41 (31), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 71 (25) ஆகியோர் அதிரடி காட்டினர். இருப்பினும், வார்னர் 10 (8), பந்த் 8 (7) போன்றவர்கள் சொதப்பியதால், டெல்லி அணி 20 ஓவர்களில் 205/8 ரன்களை எடுத்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.