பண்ணையில் இருந்து 18 டன்களுக்கும் அதிகமான பட்டாசுகளை கைப்பற்றிய போலீசார்
அமீரகத்தில் ஒரு சிறிய வீட்டில் இருந்து சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்த வியாபாரி ஒருவரை ராஸ் அல் கைமா போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து 18.5 டன் எடையுள்ள 1,038 பட்டாசு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. வீட்டின் பின்புறமுள்ள பண்ணையில் பொதிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ராஸ் அல் கைமா காவல்துறைக்கு குற்றப் புலனாய்வுத் துறையிடம் இருந்து ஒரு புகார் கிடைத்தது, அதில் ஒரு நபர் ஒரு சிறிய வீட்டில் பட்டாசுகளை விளம்பரப்படுத்தி விற்பனை செய்வதாகக் கூறப்பட்டது..
தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் சந்தேக நபரின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கும் ஆணையம் ஒரு குழுவை அமைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற குழுவினர் தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ராஸ் அல் கைமா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுஐமி, நாட்டில் பட்டாசுகளைப் பயன்படுத்துதல் மற்றும் வர்த்தகம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து குடியிருப்பாளர்களை எச்சரித்தார்.