IPL 2024: 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல் 17ஆவது சீசன், 6ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சிப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், ஷிகர் தவன் 45 (37) மட்டுமே 30க்கு மேல் ஸ்கோரை அடித்தார். இதனைத் தொடர்ந்து, பிரப்சிம்ரன் சிங் (25), சாம் கரன் (23), ஜிதேஷ் சர்மா (27), ஷாஷங் சிங் (21) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை எடுத்ததால், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 176/6 ரன்களை அடித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆர்சிபி அணியில், விராட் கோலி 77 (49), தினேஷ் கார்த்திக் 28 (10), மஹிபால் லாம்ரோர் 17 (8) போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டூ பிளஸி, கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 3 ரன்களைதான் அடித்தா்கள்.
இறுதியில், கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக தினேஷ் கார்த்திக் சிக்ஸர், பவுண்டரியை விளாசியதால், ஆர்சிபி அணி 19.2 ஓவர்கள் முடிவில் 178/6 ரன்களை குவித்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
Are you looking for Large Canvas Blank Order Now from sandhai. Large and Extra Large canvases get delivered in your doorstep. Cash on Delivery Available.