குவைத் செய்திகள்

தொழிலாளர்களுக்காக குடியிருப்பு வளாகங்கள் அமைக்க குவைத் முனிசிபாலிட்டி திட்டம்

குவைத் முனிசிபாலிட்டி, குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கான முதல் ஒருங்கிணைந்த குடியிருப்பு நகரத் திட்டத்தின் தளத்தை, 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் 3,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் சுபானில் செயல்படுத்தத் தொடங்க முதலீட்டு நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.

முனிசிபாலிட்டியின் இயக்குநர் ஜெனரல் சவுத் அல்-டபஸ், நகராட்சியானது தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த குடியிருப்பு வளாகங்களை உருவாக்க முழுமையாக செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 16 குடியிருப்பு வளாகங்கள் அமைக்கப்பட உள்ளன, ஒவ்வொரு தளத்திலும் படுக்கையறைகள், சமையலறைகள், குளியலறைகள், ஓய்வெடுப்பதற்கான ஓய்வறைகள், சலவை சேவை அறைகள் மற்றும் தனிப்பட்ட சேமிப்பு அறைகள் ஆகியவை இந்த திட்டத்தின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும் என்று அவர் விளக்கினார்.

BOT முறையின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும். மேலும், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சேவைத் தரங்களுடன் ஒருங்கிணைந்த தொழிலாளர் குடியிருப்பு நகரத்தின் உண்மையான கட்டுமானத்தை வெளிப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button