சினிமா

விடுதலை: “வழிநெடுக காட்டு மல்லி” பாடல் வெளியீடு

Viduthalai Song Release

2007-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘விடுதலை பாகம்-1’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டு மல்லி’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இளையராஜா மற்றும் அனன்யா பாட் பாடியுள்ள இந்த பாடலின் லிரிக் வீடியோ முன்பே வெளியாகி கவனம் பெற்றதையடுத்து தற்போது இந்த பாடலின் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button