அமீரக செய்திகள்

2023-ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எண்ணெய் அல்லாத பொருளாதாரம் 4.5% வளர்ச்சி அடையும் – உலக வங்கி

சமீபத்திய அறிக்கைப்படி 2023-ம் ஆண்டுக்குள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.4 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்று உலக வங்கி கணித்துள்ளது. மேலும் 2024-ல் 3.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக வங்கி Gulf Economic Update (GEU) அறிக்கையின்படி, சுற்றுலா, ரியல் எஸ்டேட், கட்டுமானம், போக்குவரத்து மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் வலுவான செயல்திறன் மூலம் UAE -ன் எண்ணெய் அல்லாத GDP வளர்ச்சி 2023 இல் 4.5 சதவீதத்தை எட்டும் என்று வங்கி எதிர்பார்க்கிறது.

இதற்கிடையில், எண்ணெய் ஜிடிபி 2023 இல் 0.7 சதவீதமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 2024 இல் 3.6 சதவீதமாக உயரும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நடப்புக் கணக்கு இருப்பு 2023-ல் 12.4 சதவீதமாகவும், 2024 -ல் 11.8 சதவீதமாகவும் உயரும் என உலக வங்கி எதிர்பார்க்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2023-ல் 5.2 சதவீதமும், 2024 இல் 4.6 சதவீதமும் நிதி இருப்பில் உபரி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கையின்படி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) மண்டலம் 2023-ல் 1 சதவீதம் வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, மீண்டும் 2024 மற்றும் 2025ல் முறையே 3.6 மற்றும் 3.7 சதவீதமாக உயரும்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button