கனேடிய குடிமக்களுக்கான இ-விசா சேவைகளை இந்தியா மீண்டும் தொடங்கியது!

கனேடிய குடிமக்களுக்கான இ-விசா சேவைகளை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னதாக செயல்பாட்டுக் காரணங்களால், செப்டம்பர் 21, 2023 முதல், இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் புதுப்பிப்புகளுக்கு BLS இணையதளத்தைப் பார்க்கவும்” என்று BLS இணையதளம் தெரிவித்துள்ளது.
BLS இன்டர்நேஷனல் சர்வீசஸ் லிமிடெட் என்பது உலகெங்கிலும் உள்ள அரசு மற்றும் இராஜதந்திர பணிகளுக்கான இந்திய அவுட்சோர்சிங் சேவை வழங்குநராகும். இந்த நிறுவனம் விசா, பாஸ்போர்ட், தூதரகம், சான்றளிப்பு மற்றும் குடிமக்கள் சேவைகளை நிர்வகிக்கிறது.
இந்நிலையில், பாதுகாப்பு நிலைமை பற்றிய அறிக்கையின் மதிப்பாய்வுக்குப் பிறகு, கனடாவில் நான்கு வகை விசா சேவைகளை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
அந்தவகையில், நுழைவு விசா, வணிக விசா, மருத்துவ விசா மற்றும் மாநாட்டு விசா ஆகிய நான்கு பிரிவுகளின் விசா சேவைகளை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
விசா சேவைகளை ஓரளவு மீண்டும் தொடங்கும் இந்தியாவின் முடிவை கனடா அரசு வரவேற்றுள்ளது.



