சவுதி செய்திகள்

மருத்துவ சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் KSrelief!

ரியாத்
சவுதி அரேபிய உதவி நிறுவனமான KSrelief உலகெங்கிலும் உள்ள நாடுகளில் முக்கியமான மருத்துவ சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

டோகோ மற்றும் மொரிட்டானியாவில், குருட்டுத்தன்மை மற்றும் அதை ஏற்படுத்தும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான தன்னார்வத் திட்டத்தை KSrelief செயல்படுத்தியுள்ளது.

இந்த முயற்சி சவுதி நூர் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதில் மருத்துவ குழுக்கள் கண் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதித்தல், கண்புரை அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் கண் கண்ணாடிகளை விநியோகித்தல் ஆகியவை அடங்கும்.

சோகோட்ரா, ஏமன் ஆகிய பகுதிகளில் KSrelief, 17 தன்னார்வலர்களின் பங்கேற்புடன் குழந்தை மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது.

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக நாட்டில் 1,040 குளிர்கால பைகளை விநியோகிக்கப்பட்டது. இதன் மூலம் 7,280 பேர் பயனடைந்தனர்

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button