கமல்ஹாசனுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்

நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக “ரவுடி பேபி” சாய்பல்லவி நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி டைரக்டு செய்கிறார். படவேலைகள் தொடங்கி உள்ளன. கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் வாழ்த்தினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பெரும்பகுதி காட்சிகளை காஷ்மீர் மற்றும் அதன் தொட்டடுத்த பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். மான் கராத்தே, ரஜினி முருகன், வேலைக்காரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு இது 21-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. “சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் இணைந்து பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் அயலான், மாவீரன் படங்களில் நடித்து முடித்து திரைக்கு வெளிவர தயாராக உள்ளது, இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரும்.