அமீரக செய்திகள்

ஐபிஎல் 2024: எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆப் வாய்ப்பு

ஐபிஎல் 17ஆவது சீசன், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 51 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளது. அதன்அடிப்படையில், தற்போது எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

ஐபிஎல் 17ஆவது சீசனில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, ஒரு அணி 16 புள்ளிகளை பெற்றாக வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 10 போட்டிகளிலேயே 16 புள்ளிகளை பெற்றுவிட்டது. மேலும், முதல் இரண்டு இடங்களில் ஒன்றைய உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.

IPL 2024: Which teams are likely to play-off?

கொல்கத்தா அணி, முதல் 10 ஆட்டங்களில் 14 புள்ளிகளை பெற்றுவிட்டது. அடுத்த, 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றால் கூட, இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

ராஜஸ்தான், கேகேஆர் அணிகளை தவிர்த்து, மற்ற இரண்டு இடங்களை பிடிக்க லக்னோ, சன் ரைசர்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

IPL 2024: Which teams are likely to play-off?

லக்னோ அணி, 10 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் இருக்கிறது. இந்த அணிக்கு, பிளே ஆப் செல்ல 67.4% வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 4 போட்டிகளில் கேகேஆர், சன் ரைசர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை ஆகிய அணிகளுக்கு எதிராக இருக்கிறது. இதில், குறைந்தபட்சம் இரண்டு வெற்றிகளை பெற்றாக வேண்டும்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், 10 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த அணிக்கு 66.7% சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. கடைசி 4 போட்டிகளில் மும்பை, லக்னோ, குஜராத், பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த அணிக்கு 48% வாய்ப்புகள் இருக்கிறது. கடைசி 4 போட்டிகளில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த 4 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே, 2ஆவது இடத்திற்கான வாய்ப்புகள், பிரகாசமாக இருக்கும்.

Gulf News Tamil

கடைசி 5 அணிகளுக்கு வாய்ப்பு குறைவுதான். பஞ்சாப்புக்கு 12%, டெல்லிக்கு 10%, குஜராத்துக்கு 5%, ஆர்சிபிக்கு 1.4% சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. மும்பை இந்தியன்ஸுக்கு 0.006% வாய்ப்பு இருக்கிறது. அதாவது, இந்த 5 அணிகளும், தங்களது அடுத்த போட்டிகள் அனைத்திலும், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலும், புள்ளிப் பட்டியலில் இருக்கும், முதல் 5 அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றாலும், பிளே ஆப் வாய்ப்பு முடிந்துவிடும்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button