கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் தொடர் பட்டியல் வெளியீடு

நடப்பாண்டில் அதிக மக்களால் கூகுளில் தேடப்பட்ட கிரிக்கெட் தொடர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நம்பர் ஒன் இடத்தை உலகக்கோப்பை இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கும். நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக் கோப்பை போட்டியை விட ஐபிஎல் தொடர் தான் நம்பர் ஒன் இடத்தை இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. உலகக்கோப்பை போட்டிகள் இரண்டாவது இடத்தில் தான் பிடித்திருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் க்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என தெரிகிறது.
மூன்றாவது இடத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இருக்கிறது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நான்காவது இடத்தில் யாருமே எதிர்பாராத வகையில் மகளிருக்கான ஐபிஎல் என அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் தொடர் இடம் பெற்றிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு தான் இந்த தொடர் முதல் முறையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஐந்தாவது இடத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியும், ஆறாவது இடத்தில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளும் இடம் பெற்றிருக்கிறது.
ஏழாவது இடத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர்கள் அதிக அளவு இந்திய மக்களால் தேடப்பட்டு இருக்கிறது. இதே போன்று எட்டாவது இடத்தில் அசஸ் கிரிக்கெட் தொடர் இடம் பெற்றுள்ளது ஒன்பதாவது இடத்தில் மகளிருக்கான கிரிக்கெட் உலக கோப்பை தொடர் இடம் பெற்றுள்ளது. பத்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ டி 20 தொடர் இடம் பெற்றிருக்கிறது. ஏனென்றால் இதில் சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் ஆகியோர் தங்களுடைய அணிகளை வாங்கி இருந்ததால் இது இந்திய மக்களுடைய கவனத்தை பெற்றது.



