ஜெர்மனியை சேர்ந்த கால்பந்து வீரர் காலமானார்

கால்பந்து உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜெர்மனியை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் பெரேம் என்ற வீரர் தன்னுடைய 63 வது வயதில் காலமானார்.
1990 ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி அர்ஜென்டினாவுடன் பல பரிட்சை நடத்தியது. இந்த போட்டியில் ஜெர்மனி அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டிச் சென்றது. இந்த கோலை ஆண்ட்ரியாஸ் பிரம்மி என்ற வீரர் தான் போட்டார். இதனால் அவர் ஜெர்மனியின் ஹீரோவாக கொண்டாடப்பட்டார்.
இந்த நிலையில் அவர் தன்னுடைய 63 வது வயதில் காலமானார். எப் சி(fc) பேயர்ன் அணியின் முன்னாள் வீரராகவும் ஆன்ட்ரியாஸ் செயல்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எப் சி பேயர்ன் அணி, ஆண்ட்ரியாஸ் மரணம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் ஜெர்மனியின் சாம்பியன் ஆவார்.இந்த சோகமான தருணத்தில் அவருடைய ரசிகர்களுடன் இணைந்து நாங்கள் எங்களுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஆண்ட்ரியாஸ் எப்போதுமே எங்களுடைய இதயத்தில் ஒரு உலக சாம்பியனாக இருப்பார் .எப் சி பேயர்ன் அணி குடும்பத்தில் அவருக்கென ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ரியாஸ் மரணத்தையொட்டி ஜெர்மனியில் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.