ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 25 அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை

ஓமன் சுல்தானில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வ விடுமுறை அளிக்கப்படும். இந்த முடிவானது கல்வியாளர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை கௌரவிப்பதோடு அவர்களுக்கு தகுதியான இடைவெளியை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விடுமுறையானது மாணவர்களுக்கு மூன்று நாள் வார இறுதியை கொடுத்துள்ளது. ஓமானின் வார இறுதி பொதுவாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை வரும்.
இது குறித்து கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஓமானி ஆசிரியர் தினமான பிப்ரவரி 24ஆம் தேதியை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை ஆண், பெண் அனைவருக்கும் அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக இருக்க வேண்டும் என்று மாட்சிமை மிக்க சுல்தான் ஹைதம் பின் தாரிக் கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடர்புடைய ஆசிரியர் மற்றும் நிர்வாக பதவிகளை வகிப்பவர்களுக்கும் விடுமுறை வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஓமானி ஆசிரியர் தினம் கொண்டாடப்படும், இந்த நாள் விடுமுறையுடன் இணைந்தால், அது வேறொரு நாளில் கடைபிடிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.