ஓமன் செய்திகள்
ஓமன் சுல்தானகத்திற்குள் நுழைய முயன்ற 35 ஊடுருவல்காரர்கள் கைது

மஸ்கட்
ஓமன் சுல்தானகத்திற்குள் நுழைய முயன்ற 35 ஊடுருவல்காரர்கள் லாரிக்குள் பதுங்கியிருந்த நிலையில் வடக்கு அல் ஷர்கியா கவர்னரேட் போலீஸ் கமாண்ட் கைது செய்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில் ராயல் ஓமன் போலீசார் கூறியதாவது:-
“வடக்கு அல் ஷர்கியா கவர்னரேட் போலீஸ் கமாண்ட், இப்ராவில் உள்ள சிறப்பு அதிரடி போலீஸ் பிரிவுடன் இணைந்து, ஆப்ரிக்க நாட்டினரின் (35) ஊடுருவல்காரர்களையும், ஊடுருவல்காரர்களை டிரக்கிற்குள் ஏற்றிச் சென்ற 3 பேரையும் கைது செய்துள்ளது.
மேலும், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு வருகின்றன” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
#tamilgulf