உலக செய்திகள்
காசாவில் அக்டோபர் 7 முதல் 28,985 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்- சுகாதார அமைச்சகம்

காசாவில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் பாலஸ்தீனப் பகுதியில் குறைந்தது 28,985 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
“கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 127 பேர் இறந்துள்ளனர், அக்டோபர் 7 அன்று போர் வெடித்ததில் இருந்து 68,883 பேர் காயமடைந்துள்ளனர்” என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1400 பேரைக் கொன்று, 200 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றது.
அப்போதிருந்து, இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதிகள் மீது இடைவிடாது குண்டுவீசி வருகிறது, அதே நேரத்தில் சர்வதேச சமூகம் இரு வேறுபட்ட பிரிவுகளுக்கு இடையில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#tamilgulf