ஐபிஎல் 17ஆவது சீசனில் கோப்பையை வெல்லும் அணி குறித்து ரசிகர்கள் நம்பிக்கை

ஐபிஎல் 17ஆவது சீசனில், அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடுவதால், பிளே ஆப் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
ஐபிஎல் 17ஆவது சீசனில்இதுவரை கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் மட்டுமே, விளையாடிய அனைத்து போட்டிகளிலும் (3) வெற்றியைப் பெற்றுள்ளது. சிஎஸ்கே, லக்னோ அணிகள் ஒரு தோல்வியை மட்டும் சந்தித்து உள்ளது.
குறிப்பாக, கௌதம் கம்பீர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு, கொல்கத்தா அணி தொடர்ந்து மிரட்டலாக விளையாடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் அந்த அணியை அசைக்க கூட முடியவில்லை.
கொல்கத்தா அணியில் 2011-ல் என்ன நடந்ததோ, அதே சம்பவம் தற்போதும் நடைபெற்று வருகிறது. இதனால், 2011-ல் கொல்கத்தா அணி கோப்பை வென்றதுபோல், தற்போதும் வெல்ல வாய்ப்புகள் இருப்பதாக, அந்த அணி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
2011-ல் கம்பீரை அதிக தொகை கொடுத்து கொல்கத்தா வாங்கியது. இதனால், டெல்லி அணியில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்றார். உடனே கேப்டனாகவும் அறிவித்தனர். கொல்கத்தா அணியில், தனது இரண்டாவது வருடத்திலேயே (2012) கம்பீர் கோப்பை வென்றுகொடுத்தார்.
2022-ல் ஷ்ரேயஸ் ஐயரை அதிக தொகை கொடுத்து கொல்கத்தா வாங்கியது. இதனால், டெல்லி அணியில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்றார். உடனே கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். கொல்கத்தா அணியில் தனது இரண்டாவது சீசனில் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதனால், ஷ்ரேயஸ் ஐயரும் கோப்பை வென்றுகொடுப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
ஐபிஎல் 17ஆவது சீசனில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர்ந்து படுமோசமாக சொதப்பி வருகிறது. ஆர்சிபி 4-ல் ஒரு வெற்றியும், மும்பை அணி மூன்றிலும் தோல்வியையும் சந்தித்துள்ளது.