கார் இன்ஜின் இயங்குவதை அப்படியே விட்டு சென்றால் Dh500 அபராதம்

Abu Dhabi:
மளிகைக் கடையில் ஷாப்பிங் செய்யும்போது, பெட்ரோல் பம்பில் எரிபொருள் நிரப்பும்போது, தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் (ஏடிஎம்) பணம் எடுக்கும்போது, பிரார்த்தனை செய்ய வெளியே செல்லும் போது உங்கள் கார் இன்ஜின் இயங்குவதை அப்படியே விட்டுவிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அபுதாபி காவல்துறை ஓட்டுநர்களை எச்சரித்துள்ளது.
500 திர்ஹம் அபராதம்
ஃபெடரல் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு எண். 70-ன் படி வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து அறிகுறிகள் மற்றும் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கத் தவறினால், Dh500 அபராதம் விதிக்கப்படும்.
கார் இன்ஜின் இயங்குவதை அப்படியே விட்டுவிடுவதால் பதுங்கியிருக்கும் சிலரால் உங்கள் வாகனம் திருடப்படுவதற்கு வாய்ப்புள்ளது. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ரோந்து இயக்குனரகம் அதிக விழிப்புணர்வு மற்றும் அலட்சியத்தைத் தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.