சவுதி செய்திகள்
அமேசான் உடன் இணைந்து அலெக்சா தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய சவுதி ஊனமுற்றோர் அமைப்பு

சவுதி அரேபியாவில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் சங்கம் அமேசானுடன் இணைந்து குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்காக வடிவமைக்கப்பட்ட அலெக்சா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குழந்தைகளின் குறிப்பிட்ட மறுவாழ்வுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அலெக்ஸா சாதனங்களுக்காக அரபு உள்ளடக்கம் உருவாக்கப்பட்டது என்று சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இந்த சங்கம் கற்றல் சூழல்களை நவீனமயமாக்க உதவும் வகையில், பல்வேறு வகுப்பறைகள் மற்றும் மறுவாழ்வு பகுதிகளில் 28 அலெக்சா சாதனங்களை அமைத்துள்ளது .
மாற்றுத்திறனாளி குழந்தைகள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல்-தமிமி, மார்ச் 7 அன்று ரியாத் மையத்தில் அமேசான் மற்றும் கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதிகளின் குழுவை வழிநடத்தினார்.
Are you looking for Large Canvas Blank Order Now from sandhai. Large and Extra Large canvases get delivered in your doorstep. Cash on Delivery Available.
#tamilgulf