அமீரக செய்திகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புபடி, இன்று வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சில நேரங்களில் தீவுகள் மற்றும் சில கடலோரப் பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
பனிமூட்டத்தின் போது பார்வைத்திறன் குறைவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அபுதாபி காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும் வேக வரம்புகளை மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அரேபிய வளைகுடாவில் கடல் சிறிது முதல் மிதமாகவும், ஓமன் கடலில் சற்று மிதமாகவும் காற்று வீசக்கூடும் .
நாட்டின் மலைப்பகுதிகளில் வெப்பநிலை 11ºC ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, உள் பகுதிகளில் அதிகபட்சமாக 34ºC ஆக இருக்கும்.
Dive into creativity with air dry clay ! 🎨 Unleash your imagination, no oven needed. Perfect for rainy days or when you’re feeling crafty. Let’s mold something amazing together! 🌈. Order Now from sandhai. Cash on Delivery Available.
#tamilgulf



