2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி

டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் 28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி களம் இறங்கியது.
2-வது சுற்று போட்டியில் 21-16, 21-9 என்ற நேர் செட்டில் வெறும் 30 நிமிடங்களில் ஆஸ்திரேலியாவின் கென்னத் ஸி ஹூய் – மிங் சூயன் லிம் இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டியது. காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன்களான சாத்விக்- சிராக் ஷெட்டி கூட்டணி அடுத்து இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னன்டோ- டேனியல் மார்தின் ஜோடியுடன் மோதுகிறது.
பெண்கள் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-18, 21-10 என்ற நேர் செட்டில் சாங் சிங் ஹய் – யாங் சிங் டுன் (சீனதைபே) இணையை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதிப்பெற்றனர்.



