குவைத்தில் இருந்து 122 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

குவைத்
கடுமையான விதிமீறல்களைச் செய்ததற்காக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவலை குவைத் போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த அக்டோபர் இறுதி வரை 122 பேர் நாடு கடத்தப்பட்டதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்ட உரிமங்களின் எண்ணிக்கை 300,000 ஐ எட்டியுள்ளதாக போக்குவரத்துத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
2020 -ல் சுமார் 50,390, 2021 இல் 88,925, 2022 -ல் 100,266 மற்றும் 2023-ல் சுமார் 53,083 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கையில் இறந்தவர்கள், குடியிருப்பு அனுமதி காலாவதியான வெளிநாட்டவர்கள் மற்றும் நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் உள்ளனர்.