UAE தொடங்கிய உப்புநீக்கும் ஆலைகள் மூலம் தினமும் 1.2 மில்லியன் கேலன் சுத்தமான தண்ணீர் காசாவை வந்தடைகிறது

UAE:
காசாவில் போர் தொடர்ந்து வரும் நிலையில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (UNRWA) காசாவில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமான நீர் அசுத்தமானது மற்றும் குடிக்க முடியாதது என கூறியது.
இந்நிலையில், எகிப்திய நகரமான ரஃபாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்தும் உப்புநீக்கும் ஆலைகள் நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு உயிர்நாடியாக விளங்குகின்றனது. தற்போது நீர் உற்பத்தி ஒரு நாளைக்கு 1,200,000 கேலன்களாக இரட்டிப்பாக்கப்பட்டது.
ஆலை விரிவாக்கம் காசாவில் வசிக்கும் 600,000 பாலஸ்தீனியர்களுக்கு பயனளிக்கும் மனிதாபிமான நடவடிக்கையாகும். இது எமிராட்டியின் ‘கேலண்ட் நைட் 3’ பணியின் ஒரு பகுதியாக உள்ளது.
இந்த ஆலை மத்தியதரைக் கடலுக்கு அடுத்தபடியாக, ரஃபா எல்லையில் இருந்து சில நிமிடங்கள் தொலைவிலும், காசாவில் இருந்து 10 நிமிட தூரத்திலும் உள்ளது. கடலில் இருந்து ஆலைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு, கடுமையான செயல்முறை மூலம் வடிகட்டி, பின்னர் 900 மீட்டர் நிலத்தடி குழாய்கள் மூலம். தண்ணீர் காசாவை அடைந்ததும், பாலஸ்தீனிய நீர் ஆணையத்தால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.



