டிரக் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

UAE:
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு திரும்பும் வழியில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அஜ்மானில் நடந்த விபத்தில் ஒரு எமிராட்டி தம்பதிகள், அவர்களின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த விபத்தில் இரு சிறுமிகளுக்கு காயம் ஏற்பட்டது.
ஜனவரி 1, திங்கட்கிழமை அதிகாலை அஜ்மானின் மஸ்ஃபுட் பகுதியில் எமிராட்டி குடும்பத்தின் வாகனம் டிரக் மீது மோதியதால் இந்த சோகம் சம்பவம் நடந்தது. அவர்கள் துபாயில் உள்ள ஹட்டாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்ததும், ரோந்துப் படையினரும், மருத்துவப் பணியாளர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிர் பிழைத்து நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரேபிய ஊடக அறிக்கைகளின்படி, ‘கவன சிதறலே’ கொடிய விபத்துக்கு காரணம் என்று கூறுப்படுகிறது.