சவுதி செய்திகள்
சவுதியில் 20 கிலோ காட் போதைப்பொருள் கடத்த முயன்ற ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் கைது

ரியாத்
ஜசான் பிராந்தியத்தில் சவுதி அரேபிய எல்லைக் காவலர்கள் 20 கிலோ காட் போதைப்பொருள் கடத்த முயன்றபோது ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். குற்றவாளி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரியாத்தில் 17 கிலோ ஹாஷிஸ் வைத்திருந்த பல எத்தியோப்பியா ஆண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தைஃபில், ஆம்பெடமைன் மாத்திரைகளை விற்க முயன்ற சவுதி அரேபியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சவுதி அரசாங்கம் சந்தேகத்திற்குரிய கடத்தல் நடவடிக்கைகள் அல்லது சுங்க மீறல்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் இரகசிய ஹாட்லைன் 1910, சர்வதேச எண் 00 966 114208417 அல்லது மின்னஞ்சல் 1910@zatca.gov.sa க்கு அழைக்குமாறு வலியுறுத்தியுள்ளது .
#tamilgulf