இந்தியா செய்திகள்சிறப்பு செய்திகள்

சந்திரயான்-3 விண்கலம்: இறுதிக்கட்ட வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றி

நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடுகளை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். நிலவை நெருங்கிய நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், சந்திராயன் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தற்போது சந்திரயான் 3 விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் 25×134 கி.மீ. தூரத்தில் உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதையடுத்து, திட்டமிட்டபடி 23-ம் தேதி புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button