சவுதி செய்திகள்
ஏமனில் 5,944 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் ஆதரவுடன் ஜூலை மாதத்தில் ஏமனின் ஹஜ்ஜா கவர்னரேட்டில் 5,204 பேருக்கு அவசர தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம் சார்பில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளது..
ஏடனில் உள்ள KSrelief-ஆதரவுடன் கூடிய செயற்கை அறுவை சிகிச்சை மையம் ஒரே மாதத்தில் 209 பயனாளிகளுக்கு உதவியது. பிசியோதெரபி மற்றும் சிறப்பு ஆலோசனைகளுடன் கூடுதலாக செயற்கை உறுப்புகளை தயாரித்தல் மற்றும் வழங்குதல் ஆகியவை இந்த சேவைகளில் அடங்கும்.
ஹஜ்ஜாவில் உள்ள வாலன் இடம்பெயர்ந்த முகாமில் உள்ள நடமாடும் கிளினிக்குகள் ஜூலை மாதம் 531 பேருக்கு சிகிச்சை அளித்தன. மேலும் இந்த கிளினிக்குகள் மூலம் 547 நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.
#tamilgulf