உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய பெண்கள் அணி தகுதி

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஒரு அணியில் 5 பேர் களம் காணும் முதலாவது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கிறது. இந்த தொடருக்கு போட்டியை நடத்தும் ஓமன் நேரடியாக தகுதி பெறும். மற்ற 5 மண்டலங்களுக்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்பட்டு, முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி அடையும்.
உலகக்கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஹாக்கி தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த போட்டிதொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா, ஜப்பான், தாய்லாந்து அணிகளுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் ஆசிய மகளிர் ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் மலேசியாவை 9-5 என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்தது. இதன் மூலம் அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றது.