விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் வாரியம் இடை நீக்கம் – ஐசிசி அதிரடி நடவடிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடை நீக்கம் செய்வதாக ஐசிசி கிரிக்கெட் அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
#tamilgulf