இந்தியா-அயர்லாந்து டி20 போட்டி: முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய பும்ரா

இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டுபிளின் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தலைமையில் இளம் படை களமிறங்குகிறது.
முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா வந்து வீச்சை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளார். முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய பும்ரா கூறுகையில், இந்திய அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஆடுகளம் பந்துவீச்சாளருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என நாங்கள் ஆசைப்படுவோம். இந்த போட்டியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய அணியில் இரண்டு அறிமுக வீரர்கள் விளையாடுகிறார்கள். ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அயர்லாந்து அணி கேப்டன் ஸ்டெர்லிங் கூறுகையில், முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய ஸ்கோரை நிர்ணிக்க வேண்டும் என நினைக்கிறேன். பேட்ஸ்மேன் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். நாங்கள் எந்த அணியை எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து யோசிக்காமல் எங்களுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதைப் பற்றிதான் யோசித்தோம். டி20 உலக கோப்பை தொடருக்கு நாங்கள் தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி தற்போது இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி அமல்படுத்தப்பட்டால் அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.