ஒற்றை GCC சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது- அமைச்சர் தகவல்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, ஒருங்கிணைந்த GCC சுற்றுலா விசாவைத் தொடங்க மற்ற GCC கூட்டாளர்களுடன் இணைந்து முயற்சிகள் நடந்து வருகின்றன என கூறினார்.
“இது நடைமுறைக்கு வந்ததும், GCC நாடுகளில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை முன்னிலைப்படுத்தவும், நீண்ட காலத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், தக்க வைக்கவும் இது பங்களிக்கும். இதனால் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரித்து, பிராந்திய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் முன்னணி இடமாக இப்பகுதியை மாற்றும். ரியாத்தில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அல் மரி இதனை கூறினார்.
வளைகுடா நாடுகள் ஒரே சுற்றுலா விசாவில் ஷெங்கன் பாணி விசாவைப் போலவே ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை செய்து வருகின்றன. அனைத்து நாடுகளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுமூகமான மற்றும் தடையின்றி இப்பகுதியில் நுழைவதற்கு தங்கள் அமைப்பை ஏற்படுத்தியவுடன் இது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுற்றுலாத் துறை 2022 உடன் ஒப்பிடும் போது 2023 ல் குறிப்பிடத்தக்க 26 சதவீதம் வளர்ச்சியடைந்தது மற்றும் 2019 ன் நிலைகளை 14 சதவீதம் தாண்டியது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பு Dh220 பில்லியன் ஆகும், இது 11.7 சதவீதமாக உள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் 236 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.