அமீரக செய்திகள்
கோடை காலத்தில் டயர் வெடிப்பது ஏன்? பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை வெளியிட்ட ஆணையம்!

துபாயில் கோடை காலத்தில் டயர் பழுதடைவதால் விபத்துகள் அடிக்கடி நிகழ்கிறது. வெப்ப அழுத்தம், அதிக சுமை, சேதம் மற்றும் வீக்கம், டயரின் வயது மற்றும் தரம் போன்ற பல காரணங்களால் டயர்கள் அடிக்கடி வெடிக்கலாம்.
வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்கவும் விபத்துகளைத் தவிர்க்கவும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்புக் குறிப்புகளை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது.
- வாகன ஓட்டிகள் டயர் செல்லுபடியாகும் மற்றும் அதிர்வுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- வாகன ஓட்டிகள் அவ்வப்போது டயர்களில் விரிசல் மற்றும் வீக்கம் உள்ளதா என சோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
- ஓட்டுநர்கள் தொடர்ந்து என்ஜின் ஆயிலை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
- வாகன ஓட்டிகள் திரவம் கசிவு உள்ளதா என தொடர்ந்து சரிபார்க்க வேண்டும்.
- வழக்கமான வாகன சோதனைகள் சாலையில் விபத்துகளைத் தவிர்க்க முக்கிய காரணம்.
அபுதாபியில் 2023 ஆம் ஆண்டில் 22 போக்குவரத்து விபத்துக்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், டயர் வெடிப்பதைக் கவனிக்குமாறு வாகன ஓட்டிகளை போலீஸார் எச்சரித்துள்ளனர்.
#tamilgulf