துபாய், அபுதாபியில் ஈத் அல் அதா நீண்ட வார இறுதியில் பட்டாசு காட்சிகளை எங்கே பார்க்கலாம்?

நீங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிட்டால், நீங்கள் பட்டாசு காட்சிகளை பார்க்கக்கூடிய இடங்களுக்கான விரைவான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸுக்கு (DPR) வருபவர்கள் பிரமிக்க வைக்கும் வானவேடிக்கைக் காட்சியை ரசிக்கத் தயாராக உள்ளனர். அங்கு டிக்கெட்டுகள் 295 திர்ஹாம். DPR ன் நான்கு தீம் பூங்காக்களை இணைக்கும் பகுதியின் விவரங்கள்:
இடம்: துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸில் ரிவர்லேண்ட் துபாய்
தேதி: ஜூன் 16 மற்றும் 17
நேரம்: இரவு 9 மணி
நுழைவுச் சீட்டு: வானவேடிக்கைக் காட்சி இலவசம் என்றாலும், ரிவர்லேண்டிற்கான நுழைவுச் சீட்டுகளுக்கு ஒருவர் பணம் செலுத்த வேண்டும். கவுண்டரில் வாங்கும் போது ஒரு டிக்கெட்டின் விலை 20 திர்ஹாம், ஆனால் அந்தத் தொகையை உணவு மற்றும் பானங்கள் வாங்கப் பயன்படுத்தலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, டிக்கெட்டின் விலை 15 திர்ஹாம், ஆனால் உணவு மற்றும் பானம் வாங்க பயன்படுத்த முடியாது.
அபுதாபியில் இருப்பவர்கள் வானவேடிக்கை நிகழ்ச்சியை அபுதாபி கார்னிச்சில் ஜூன் 16 அன்று இரவு 9 மணிக்கு பார்க்கலாம்.
அல் ஐனில் உள்ள ஹஸ்ஸா பின் சயீத் ஸ்டேடியத்தில் ஜூன் 16 அன்று இரவு 9 மணிக்கு பார்க்கலாம்.
அல் தஃப்ராவில் பொதுப் பூங்கா/ மதீனத் சயீத்/அல் மர்ஃபாவில் ஜூன் 16 அன்று இரவு 9 மணிக்கு பார்க்கலாம்.