அமீரக செய்திகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானிலை: இன்று பிற்பகல் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிக்கை படி, ஜூன் 10 திங்கட்கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஓரளவு மேகமூட்டத்துடன் கூடிய வானிலை மற்றும் சில நேரங்களில் தூசி நிறைந்த வானிலையை எதிர்பார்க்கலாம்.
வெப்பச்சலன மேகங்கள் உருவாகியுள்ளதால், பிற்பகலில் சில கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று உள் பகுதிகளில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
அபுதாபி மற்றும் துபாயில் முறையே 44ºC மற்றும் 43ºC வரை வெப்பநிலை இருக்கும்.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் இன்று கடல் அலை சிறிது சிறிதாக இருக்கும்.
#tamilgulf



