அமீரக செய்திகள்
UAE: தனியார் துறை ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

UAE:
அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் திங்கட்கிழமை, ஜனவரி 1, 2024 பொது விடுமுறை என்று மனித வள அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தனியார் துறை ஊழியர்கள் புத்தாண்டைக் கொண்டாட நீண்ட வார இறுதி நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட ஒரு ட்வீட்டில், “மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் திங்கள்கிழமை, ஜனவரி 1, 2024 அன்று புத்தாண்டு தினமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கும் என்று அறிவிக்கிறது.” என்று கூறப்பட்டிருந்ததது.
#tamilgulf