குவைத்தின் புதிய எமிருக்கு UAE ஜனாதிபதி வாழ்த்து

UAE:
குவைத்தின் புதிய எமிரான ஷேக் மெஷல் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவுக்கு ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
ஷேக் முகமது தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறியுள்ளதாவது:- “எனது சகோதரர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ் குவைத் மாநிலத்தை மேலும் முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளில் செழிப்புடன் வழிநடத்துவதில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
ஒன்றாக, நாம் நமது ஒற்றுமையின் பிணைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்துவோம் மற்றும் எங்கள் மக்களின் நலனுக்காக கூட்டு வளைகுடா நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என்று கூறியுள்ளார்.
சனிக்கிழமை காலமான ஷேக் நவாப் அல் அகமது அல் ஜாபர் அல் சபாவுக்கு அடுத்தபடியாக ஷேக் மெஷல் அல் அகமது அல் ஜாபர் அல் சபாவை அந்நாட்டின் புதிய அமீராக குவைத் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



