UAE ஜனாதிபதி மற்றும் பிரதமர் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு

UAE:
ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பதவிப் பிரமாணத்திற்குத் தலைமை தாங்கினர்.
பதவியேற்பு விழா அபுதாபியில் உள்ள கஸ்ர் அல் வதன் என்ற இடத்தில் நடைபெற்றது.
புதிய கேபினட் உறுப்பினர்களுக்கு ஷேக் முகமது பின் சயீத் வாழ்த்துத் தெரிவித்ததோடு, அவர்களின் தேசியப் பணிகளை வெற்றிகரமாகச் செய்ய வாழ்த்தினார். இது தொடர்பாக அவர் X-ல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
“இன்று புதிய அரசாங்க அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் எனது சகோதரர் முகமது பின் ரஷீத்துடன் இணைந்து கொள்வதில் நான் பெருமையடைகிறேன். நாங்கள் அவர்களை வாழ்த்துகிறோம், மேலும் தேசத்திற்கு சேவை செய்வதில் அவர்கள் வெற்றிபெறவும், தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான எங்கள் பகிரப்பட்ட லட்சியங்களை அடையவும் வாழ்த்துகிறோம். முன்னர் நாட்டிற்கு சேவை செய்த அனைத்து அமைச்சர்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும் பல ஆண்டுகளாக அவர்களின் அர்ப்பணிப்பு முயற்சிகளைப் பாராட்டுகிறோம், ”என்று தெரிவித்தார்.



