UAE: 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. மொத்தம் 13 நாட்கள் விடுமுறை மற்றும் 4 நீண்ட வார இறுதி நாட்கள் உள்ளன. எந்தெந்த தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.
புத்தாண்டு: 3-நாள் வார இறுதி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பாளர்கள் 2024-ம் ஆண்டை நீண்ட வார இறுதியுடன் தொடங்குவார்கள். புதிய ஆண்டின் முதல் அதிகாரப்பூர்வ விடுமுறை, ஜனவரி 1, திங்கட்கிழமை, இது மூன்று நாள் வார இறுதியில் வருகிறது.
ஈத் அல் பித்ர்: 6 நாள் விடுமுறை
இந்த இஸ்லாமிய பண்டிகையானது நோன்பு மாதமான ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை பொது விடுமுறை என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
ஐஏசிஏடி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, ரமலான் 29 நாட்கள் இருக்கும். இதன் அடிப்படையில், தொடர்புடைய கிரிகோரியன் நாட்காட்டி தேதியின் படி செவ்வாய், ஏப்ரல் 9 முதல் வெள்ளி, ஏப்ரல் 12 வரை விடுமுறை வருகிறது. சனி, ஞாயிறு வார இறுதியை சேர்த்து ஆறு நாள் விடுமுறை கிடைக்கும்.
அரஃபா நாள், ஈத் அல் அதா: 5 நாட்கள் விடுமுறை
இஸ்லாத்தில் புனிதமான நாளாகக் கருதப்படும், அரஃபா தினம் துல்ஹிஜ்ஜா 9 அன்று அனுசரிக்கப்படுகிறது. இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் அதா மூன்று நாட்களில் கொண்டாடப்படுகிறது. தொடர்புடைய கிரிகோரியன் நாட்காட்டி தேதிகளின் படி, ஜூன் 16, ஞாயிறு, ஜூன் 19, புதன்கிழமை வரை விடுமுறை வருகிறது. வார இறுதியான சனிக்கிழமை, ஜூன் 15-ம் தேதியையும் சேர்த்து ஐந்து நாட்கள் விடுமுறை.
இஸ்லாமிய புத்தாண்டு: 1 நாள் விடுமுறை
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது புத்தாண்டு ஜூலை மாதத்தில் வரும். ஹிஜ்ரி ஆண்டின் முதல் நாளான முஹர்ரம் 1, ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட விடுமுறை இல்லை, ஆனால் ஞாயிறு வார இறுதி இல்லாதவர்களுக்கு இது ஒரு நாள் விடுமுறை.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்
இது ரபி அல் அவ்வல் 12 அன்று இருப்பதாக நம்பப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின் தேதி உடனடியாகத் தெரியவில்லை.
தேசிய நாள்
ஆண்டின் கடைசி அதிகாரப்பூர்வ விடுமுறை டிசம்பர் 2, திங்கள் மற்றும் 3, செவ்வாய் ஆகிய தேதிகளில் வருகிறது. சனி மற்றும் ஞாயிறு வார இறுதியுடன் வருவதால் நான்கு நாள் விடுமுறை கிடைக்கும்.



