அமீரக செய்திகள்
முக்கிய சாலையின் ஒரு பகுதி இன்றுமுதல் 10 நாட்கள் மூடப்படுவதாக அறிவிப்பு

ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் இன்று, டிசம்பர் 10, 2023 முதல் முக்கிய சாலையின் ஒரு பகுதி மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
அல் ஐனில் உள்ள சயீத் அல் அவ்வல் தெருவில் ஒரு பகுதி சாலை மூடப்படும் என போக்குவரத்து மையம் X-ல் வெளியிட்ட பதிவில் அறிவித்துள்ளது.
டிசம்பர் 20, 2023 புதன்கிழமை வரை சாலை மூடல் அமலில் இருக்கும். கீழே உள்ள வரைபடம் மூடப்பட்ட பகுதியைக் குறிக்கிறது:
வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறும், போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
#tamilgulf