இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீனப் பகுதியில் குறைந்தது 17,700 பேர் உயிரிழப்பு

Gaza:
ஹமாஸ் நடத்தும் காசா பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம் இன்று கூறியதாவது:-
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனப் பகுதியில் குறைந்தது 17,700 பேர் இறந்துள்ளனர். மேலும் போரில் 48,780 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
“காசா மக்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் எந்த விவரிப்புக்கும் அப்பாற்பட்டவை… அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதரவுடன் பாலஸ்தீனிய இருப்பை முடிவுக்குக் கொண்டுவருவது மனிதாபிமானமற்றது” என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல் குத்ரா கூறினார்,
1,200 பேரைக் கொன்று 240 க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளைப் பிடித்த ஹமாஸின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அக்டோபர் நடுப்பகுதியில் மக்கள் செறிவான காசா பகுதியின் மீது தரைவழி ஆக்கிரமிப்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.